வைகுண்டம் கூப்பிடும் தூரத்தில் தான் உள்ளது, கைலாயம் கைக்கெட்டும் தூரத்தில் தான் உள்ளது என கேள்வி பட்டு இருப்போம் , ஆனால் அதன் விளக்கம் பெரும்பாலும் யாவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை .. முன்னொரு காலத்தில் கஜேந்திரன் என்ற யானை ஒன்று மகா விஷ்ணுவை தினந்தோறும் பூசித்து வந்தது , ஒரு சமயம் மகா விஷ்ணுவவிற்கு அபிஷேகம் செய்ய வேண்டி அருகிலுள்ள குளத்தில் இறங்கும் சமயம் முதலையொன்று அதன் காலை கவ்வி நீருக்குள் இழுக்க முயன்றது, வலி தாங்காமல் கஜேந்திரன் "ஓம் நமோ நாராயணா" என்று அலறி முடிப்பதற்குள் மகா விஷ்ணு அங்கு தோன்றி தன் சக்கராயுத்தால் முதலையை வதம் செய்து கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்தர். கூப்பிட்ட குறளுக்கு வைகுண்ட வாசன் அருள் பொழிந்ததால் தான் "வைகுண்டம் கூப்பிடும் தூறத்தில் தான் உள்ளது " என்கிறோம். . கைக்கு எட்டும் தூறத்தில் தான் கைலாசம் பற்றிய விவரத்தை நாளை பார்க்கலாம் . நன்றி ..