இந்து மதம் இந்தியாவில்தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றெனக் கருதப்படுகிறது. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாகஇருக்கின்றது. பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலும், நேபாளத்திலும் வசிக்கின்றார்கள். இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், பிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.
தனி ஒரு நபரால் தோற்றுவிக்கப்படவில்லை என்பது பெருமை வாய்ந்த இந்து மதத்தின் தனி சிறப்பு, மேலும் மற்ற மதங்களை போல அனைவரையும் கட்டுப்படுத்தவோ ஆணையிடவோ தனி நபர் அதிகாரம் இந்து மதத்தில் கிடையாது, நம்மை வாழ வைக்கும் அனைத்திலும் இறைவன் உறைந்துள்ளான் என்பது இந்து மதத்தின் சித்தாந்தம். இன்னும் எண்ணற்ற பெருமைகள் இந்து மதத்திற்கு உண்டு...

Comments
Post a Comment